தமிழக அரசு இந்துக்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி;

Update:2022-12-14 01:00 IST

இந்து முன்னணி ஈரோடு மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோபி வெள்ளாளபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர்கள் செல்வராஜ், குறிஞ்சி சேகர், கிருஷ்ணசாமி, குமார் உள்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். முன்னதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு இந்துக்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது. தி.மு.க. மீது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் போதைப்பொருள் அதிகமாக பள்ளி, கல்லூரி பகுதிகளில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் பயங்கரவாத சக்தி உருவாகி வருகிறது. மோடியின் சிறப்பான ஆட்சியால் குஜராத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அங்குள்ள இஸ்லாமியர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்