தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
மயிலாடுதுறையில்தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.;
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். சங்க புதிய நிர்வாகிகளை அறிவித்து சிறப்புத்தலைவர் பாலசுப்ரமணியன் பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலின்போது வாக்குறுதி அளித்தப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியம்,மதிப்பூதியம், சிறப்புகாலமுறை ஊதியம் என்ற அடிமை முறையில் பணியாற்றி வரும் பணியாளார்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ரேஷன்கடைகளில் பொருட்கள் சரியான எடையில் மக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி முதல் நவம்பர் 23-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைப்பயண பிரச்சாரம் செய்ய உள்ளோம். நவம்பர் 27ம் தேதி சென்னையில் பேரணியாக சென்று தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து நான்காவது முறையாக மனுஅளிக்க உள்ளோம். தமிழக முதல்-அமைச்சர் எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை தீர்க்கவேண்டும் என்றார். முடிவில் மாவட்ட செயலாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.