கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2023-02-18 08:53 GMT

சென்னை,

கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்