தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா..!

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-10 01:40 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். ராஜினாமா முடிவை தமிழக அரசிடமும், முதல்-அமைச்சரிடமும் சண்முகசுந்தரம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பொறுப்பில் இருந்து விலகி சண்முகசுந்தரம் தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

1989-1991ல் திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றினார். 1996 முதல் 2001 வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தார். 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம்.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்