தமிழக பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி -மத்திய மந்திரி பங்கேற்கிறார்

மோடி அரசு பொறுப்பு ஏற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கிறார்.

Update: 2023-06-06 20:50 GMT

சென்னை,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 9 ஆண்டு காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு, கட்டுபவர்களுக்கு மானியம், முத்ரா கடன் உதவி, தூய்மை இந்தியா திட்டம், டிஜிட்டல் பரிவர்த்தனை, குழாய் வழி குடிநீர் இணைப்பு, காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. மத்திய அரசு திட்டத்தினால், தமிழக மக்கள் அதிகம் பயன் அடைந்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்ல வேண்டியது எங்களது கடமை. தேர்தலுக்கும், இதற்கும் தொடர்பு இல்லை. மத்திய அரசின் நிறைய திட்டங்களை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லவிடாமல் தடுப்பதற்கு சில சதிகள் நடக்கிறது. மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து துண்டு பிரசுரமாக கொடுக்க உள்ளோம்.

அமித்ஷா

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்கிறார்கள். மாநில தலைவர் அண்ணாமலை 12 பொதுக்கூட்டங்களிலும், மத்திய இணை மந்திரி எல்.முருகன் 9 பொதுக்கூட்டங்களிலும் பேச உள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் முக்கிய நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள்.

நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள், மத்திய அரசு திட்டத்தால் பயன்பெற்ற பயனாளிகளின் சந்திப்பு, வணிகர்கள் மாநாடும் நடத்தப்பட உள்ளது. மண்டல அளவில் சிறிய அளவிலான பிரசார கூட்டங்கள், வாகன பிரசாரங்களும் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்துக்கு ஆர்.என்.ரவி போன்று கவர்னர் கிடைத்தது அற்புதமான வாய்ப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்