தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா
வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா;
வாணாபுரம்
வாணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் பீமாராவ்மனோகர் வரவேற்றார்.
இதில் தலைமைஆசிரியர் நந்தகுமார் பேசுகையில், தமிழ் மொழியின் தொன்மை குறித்து மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவது மட்டுமல்லாமல் அதன் வளர்ச்சி குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மாணவர்கள் படிக்கும்போதே தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் வாணாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெரால்டின், ஆசிரியர்கள் வெங்கடேசன், கோமதிராணி, பிளாரன்ஸ்ராஜசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.