தமிழ் மரபு-பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
தமிழ் மரபு-பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.;
குளித்தலையில் தமிழக அரசு சார்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு குளித்தலை கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் மகுடீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி கலந்து கொண்டு, தமிழின் பெருமைகள் குறித்தும், ஈகையை முக்கிய கருவாக கொண்டும், வரலாற்றில் அக்கால அரசர்கள் ஈகை புரிந்தது குறித்தும், அவ்வையார், திருக்குறளில் திருவள்ளுவர் ஈகை குறித்து கூறியுள்ளவற்றை மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.
பின்னர் தமிழ் பெருமிதம் என்ற புத்தகத்தில் உள்ள பல்வேறு தலைப்புகளின் கீழ், தமிழ் பெருமைகளை குறிப்பிடும் தகவல்கள் குறித்து மாணவிகள் பேசினார்கள். அதில் சிறப்பாக பேசியவர்களுக்கும், இந்த நிகழ்ச்சி குறித்து சிறந்த கேள்வி எழுப்பிய 2 பேருக்கு கேள்வி நாயகன் மற்றும் கேள்வி நாயகி என்றும் சான்றிதழ்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு 3 புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு துறை சார்ந்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.