தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-12 19:48 GMT

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி ேபசினார். இதையடுத்து, "மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்னும் பொருண்மையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியதாவது:- தமிழகம் உயர்கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை குறைத்த மாநிலம் தமிழ்நாடு ஆகும். பெண்கள் கல்வி அறிவில் தமிழகத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.

தமிழ்மொழி உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பண்டையகால நூல்களே இதற்கு சிறந்த உதாரணமாகும். தமிழர்கள் பண்டைய காலத்திலேயே மிகச்சிறந்த நாகரிகத்தை கொண்டிருந்தனர். இதேபோன்று தமிழ்மொழியும் மிகவும் தொன்மை வாய்ந்தது. சிறப்பு வாய்ந்தது. எனவே நமது தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்