தாளவாடி அண்ணாநகர் பகுதியில் நிழற்குடை கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்
தாளவாடி அண்ணாநகர் பகுதியில் நிழற்குடை கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்
தாளவாடி
தாளவாடி அருகே அண்ணா நகர் பகுதியில் பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் நிழற்குடையின் கான்கிரீட் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினா்.
இது குறித்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'பழுதடைந்த மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.