வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
கட்டிலில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கீழே தள்ளி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பி சென்ற நபர்.
இளையான்குடி
இளையான்குடி அருகே வடக்கு சாலைக்கிராமத்தை சேர்ந்தவர் சங்கையா. இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 65). சம்பவத்தன்று சங்கையா தன்னுடைய பேரன் சரத்குமார் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல இருந்ததால் அவரை வழி அனுப்புவதற்காக தேவகோட்டைக்கு சென்றிருந்தார். வீட்டில் காளியம்மாள் மட்டும் தனியாக இருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் 2 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். கட்டிலில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த காளியம்மாளை கீழே தள்ளி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர்.. இச்சம்பவம் குறித்து காளியம்மாள் சாலைக்கிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.