மனு கொடுத்தவர்களிடம் தாசில்தார் விசாரணை

சிறுமலையில் இலவச பட்டா கேட்டு மனு கொடுத்தவர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தினார்.

Update: 2023-05-13 19:00 GMT


திண்டுக்கல் அருகே சிறுமலை அகஸ்தியர்புரத்தில் வசிக்கும் பொது மக்கள் இலவச பட்டா கேட்டு கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.இந்த நிலையில் கிழக்கு தாசில்தார் தமிழ்செல்வி, சிறுமலை ஊராட்சி தலைவர் சங்கீதா வெள்ளிமலை ஆகியோர் அகஸ்தியர்புரம் கிராமத்திற்கு சென்றனர்.


பின்னர் இலவச பட்டா வழங்க கோரி மனு கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மண்டல துணை தாசில்தார் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் சுகுமார், கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார், ஊராட்சி செயலர் முத்துக்குமார் மற்றும் பலர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்