கள்ளபிரான் கோவிலில் ஊஞ்சல் திருவிழா
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் ஊஞ்சல் திருவிழா நடந்தது
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் ஊஞ்சல் திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும். நேற்று காலை விஸ்வரூபம், திருமஞ்சனம் நடந்தது. மாலை சாயரட்சை, சுவாமி கள்ளபிரான் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பால் குறட்டில் ஊஞ்சலில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது.
நாலாயிர திவ்ய பிரபந்தம் நடந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி பலர் கலந்து கொண்டனர்.