போதிய நீச்சல் பயிற்சி இன்றி நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்

போதிய நீச்சல் பயிற்சி இன்றி ஆபத்தான நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-04-23 18:45 GMT

அடிக்கடி உயிரிழப்புகள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நீர் தேக்கங்கள், ஏரி, குளங்கள், ஆறுகள், கல் குவாரிகள் மற்றும் கிணறுகள் ஆகியவற்றில் போதிய பயிற்சியின்றி நீச்சலில் ஈடுபடுவதாலும், குளிக்க செல்வதாலும் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

எனவே உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு போதிய நீச்சல் பயிற்சியின்றி நீர்நிலைகளில் இறங்குவதை தவிர்ப்பதுடன், ஆபத்தான நீர்நிலைகளில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் ஆபத்தான நீர்நிலை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

கம்பிவேலி

மேலும் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரிகளில் நீர் தேங்கி இருப்பின் அப்பகுதியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க கல்குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பெற்றோர்களும் தங்களது மாணவ, மாணவிகள் ஆபத்தான பகுதிகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. இதேபோல் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், குழந்தைகள் தவறி விழாதவாறு மூடியிட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்