சுவாமிமலையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
சுவாமிமலையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
கபிஸ்தலம்:
சுவாமிமலையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் உஷா வரவேற்று பேசினார்.
சுவாமிமலை பேரூராட்சியுடன் அருகில் உள்ள ஊராட்சிகளான நாகக்குடி, திருவலஞ்சுழி, பாபுராஜபுரம், வலையப்பேட்டை, மாங்குடி, ஆகிய ஊராட்சிகளை இணைத்து தரம் உயர்த்தி சுவாமிமலை பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பினர்கள் ஆதரவு
இந்த தீர்மானத்திற்கு 9 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் பேரூராட்சி வரவு செலவு கணக்குகள் தொடர்பான தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.