பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் பணி நீக்கம்

பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-09-22 18:45 GMT

லஞ்சம் வாங்கிய சர்வேயர்

விக்கிரவாண்டி பழைய போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 42). இவர் தனியார் அரிசி ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். வி.சாலை பகுதியில் புதிதாக வாங்கிய வீட்டுமனைக்கான பட்டாவை பெயர் மாற்றம் செய்வதற்காக நேற்று முன்தினம் ராஜி, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் சென்று அங்கு ஒப்பந்த நில அளவையராக (சர்வேயர்) பணியாற்றி வரும் வெங்கடாசலம் (27) என்பவரை அணுகினார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுகுறித்து ராஜி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ய, போலீசார் கூறிய அறிவுரைப்படி அவர், ரசாயன பொடி தடவிய லஞ்சப்பணத்தை எடுத்துக்கொண்டு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் சென்று அங்கிருந்த வெங்கடாசலத்திடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது வெங்கடாசலத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பணி நீக்கம்

இந்நிலையில் ஒப்பந்த நில அளவையர் வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட நில அளவைகள் துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்