கணக்கெடுப்பு பயிற்சி

நகராட்சிகளின் தூய்மை பணியாளர்களை அடையாளம் காணுதல் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது.

Update: 2023-09-29 18:45 GMT

திருவாரூரில் நகராட்சி நிர்வாகம் இயக்குனரகம் தஞ்சை மண்டலத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளின் தூய்மை பணியாளர்களை அடையாளம் காணுதல் தொடர்பாக கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கி பேசுகையில், முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் என்பது அவர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் ஒரு முன்னோடி திட்டமாகும். கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை உயர்ந்து பொருளாதார மேம்பாடு அடையும் என்றார். இதில் நகராட்சி ஆணையர் மல்லிகா, துப்புரவு அலுவலர் மூர்த்தி, தஞ்சாவூர் மண்டலம் தூய்மை இந்தியா திட்ட திடக்கழிவு மேலாண்மை நிபுணர் ஜனனி, பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு அலுவலர் நெடுமாறன், திருவாரூர் துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்