வேளாங்கண்ணியில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு

ஈஸ்டர்பண்டிகையையொட்டி வேளாங்கண்ணியில் முன்னேற்பாடுகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-07 18:45 GMT

வேளாங்கண்ணி:

ஈஸ்டர்பண்டிகையையொட்டி வேளாங்கண்ணியில் முன்னேற்பாடுகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

வேளாங்கண்ணி பேராலயம்

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இங்கு வரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேரூராட்சி சார்பாக 12 நீச்சல் வீரர்களுடன் கூடிய இரண்டு பைபர் படகு பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடலின் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் தற்காலிக தடுப்பு அரண் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில்

இந்த பணியில் சுழற்சி முறையில் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தன்னார்வ இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கு போதிய கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் வழங்கவும் மற்றும் இரண்டு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், உதவி கலெக்டர் பனோத் ம்ருகேந்தர் லால், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவரும், வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ்ஆல்வா எடிசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) மாதவன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தாசில்தார் ரமேஷ்குமார், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) சிதம்பரக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்