சோளிங்கர் பஸ்நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

சோளிங்கர் பஸ்நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-25 16:05 GMT


சோளிங்கர் பஸ் நிலையத்துக்கு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள், பயணிகளின் செல்போன்கள், திருடு போவது வழக்கமாக உள்ளது. எனவே குற்றச் செயல்களை கண்காணிக்கும் வகையில் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்