முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும்

சிங்கம்புணரியில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2022-11-02 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரியில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர் திருட்டு

சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 20,000 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சிங்கம்புணரியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுவரை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலனவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனால் தினந்தோறும் சிங்கம்புணரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகையில், சிங்கம்புணரி தொழில் சார்ந்த, தொழில் நிறைந்த நகரம். சமீப காலங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் கோவில்களிலும் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியல் பணங்கள் திருடப்பட்டு வருகிறது. தற்போது போலீசார் சிங்கம்புணரியில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் அதிகமாக செல்வதில்லை.

கண்காணிப்பு கேமரா

திருட்டு சம்பவங்களை தடுக்க அதிகமான போலீசாரை நியமித்து கூடுதல் கவனம் செலுத்தி ரோந்து பணிகள் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக செல்பவர்கள் மற்றும் வருபவர்களை முறையாக விசாரணை செய்ய வேண்டும். மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாகவும், கண்காணிக்கும் விதமாகவும் சிங்கம்புணரியில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். நான்கு ரோடு சாலையில் ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமரா பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். அதேபோல் திண்டுக்கல் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவும் செயல்படாமல் உள்ளது. மேலும், பெரிய கடை வீதியில் அறிஞர் அண்ணா வளைவு அருகில், சுந்தர் நகர் ஆர்ச் பகுதி, காரைக்குடி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்