நல்லம்பள்ளி அருகே, 2 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்

நல்லம்பள்ளி அருகே, 2 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கோர்ட்டில் சரண்;

Update:2022-08-03 22:42 IST

நல்லம்பள்ளி:

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்பாய் மற்றும் திருவனந்தபுரம் வெள்ளாத்துக்காடு பகுதியை சேர்ந்த நிவீல்குருஸ் ஆகியோர் நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி பெரியகரடு என்ற வனப்பகுதியில் கல்குவாரி அருகே கடந்த மாதம் 19-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் (26), சுரேன்பாபு (25) விஷ்ணுவர்மன் (27) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரகு (42) ஆகிய 4 பேர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (40), லட்சுமணன் (எ) அபு (37) ஆகியோரை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் சிறையில் உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த 3 பேரை அதியமான்கோட்டை போலீசார் தேடி வந்த நிலையில் மேட்டூர் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவர் திருச்செங்கோடு கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்