பிரம்மதேசம் அருகேவிஷ்ணு துர்காம்பிகை கோவிலில் சூரசம்ஹார விழா

பிரம்மதேசம் அருகே விஷ்ணு துர்காம்பிகை கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

Update: 2023-05-07 18:45 GMT


பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அடுத்த அறியந்தாங்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணு துர்காம்பிகை கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி சூரசம்ஹார விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் விஷ்ணு துர்காம்பிகை மஹிஷாசூரனை சம்ஹாரம் செய்து மஹிஷாசூரமர்தினியாக அவதாரம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு சூரசம்ஹாரம் செய்யும் சூலாயுதத்தை எடுத்து கொடுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பிரம்மதேசம், அரியந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விஷ்ணு துர்காம்பிகை கோவில் அறக்கட்டளைநிர்வாகிகள் மற்றும் திருஞான மணிபால துர்கை சித்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்