சுரண்டை நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு

சுரண்டை நகராட்சி புதிய ஆணையாளராக முகம்மது சம்சுதீன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2022-12-10 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய லெனின் கடந்த ஜூன் மாதம் குமரி மாவட்டம் பத்மநாதபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தென்காசி ஆணையாளர் பாரிஜான் பொறுப்பு கமிஷனராக பணியாற்றினார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஆணையாளராக பணியாற்றிய முகம்மது சம்சுதீன் சுரண்டை நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்