சுரண்டை நகராட்சி கூட்டம்

சுரண்டை நகராட்சி கூட்டம் அதன் தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் நடந்தது.

Update: 2023-03-30 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கராதேவி முருகேசன், ஆணையாளர் முகமது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜெயபாலன், பரமசிவன் ஆகியோர் பேசும்போது, சுரண்டை பொன்ரா மருத்துவமனை அருகில் கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் அமைக்க வேண்டும். சுரண்டை பஸ் நிலையத்தில் கலைஞர் படிப்பகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர், சுரண்டை பஸ் நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்த தொழிலதிபர் எஸ்.வேலாயுதநாடார் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். கவுன்சிலர் வசந்தன், சுரண்டை 6-வது வார்டு மற்றும் சுரண்டை நகராட்சி பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்தார். கவுன்சிலர் அமுதா சந்திரன், கட்டிட அனுமதி நிலுவை இல்லாமல் விரைந்து வழங்க வேண்டும் என்று கூறினார்.

கவுன்சிலர் வேல்முத்து, சுரண்டை காமராஜர் வணிகவளாக மார்க்கெட் அருகில் காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும். கடைகளுக்கான உரிம கட்டணங்களை அபராதம் இல்லாமல் வசூலிக்க வேண்டும். அதற்கு இந்த மன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்துபேசிய நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், இந்த கோரிக்கைகள் மன்றத்தில் விவாதத்துக்கு விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்