சுரண்டை நகராட்சி கூட்டம்

சுரண்டை நகராட்சி அவசர கூட்டம் நடந்தது.

Update: 2022-10-28 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை நகராட்சியில் அவசர கூட்டம் தலைவர் வள்ளிமுருகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், நகராட்சி ஆணையாளர் பாரிஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சுரண்டை நகராட்சி பகுதியில் காலி மனை வரியாக சதுர அடி ஒன்றுக்கு அரை ஆண்டிற்கு (6 மாதங்களுக்கு) 40 பைசா என நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வந்தது. பொதுமக்கள் காலி மனை வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களையும் ஒரே மண்டலமாக நிர்ணயம் செய்து அரையாண்டு காலி மனை வரியாக சதுர அடிக்கு 25 பைசா ஆக நிர்ணயம் செய்து வசூல் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், அரசு ஆணைப்படி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் 4 பேர் கொண்ட வார்டு குழு சபா அமைக்கப்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்