செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Update: 2024-07-12 10:01 GMT

புதுடெல்லி,

சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஓராண்டு ஆகியும் ஜாமீன் வழங்காத நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பலமுறை ஒத்திவைத்துள்ளதாகவும், விரைந்து ஜாமீன் வழங்குமாறும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கால அவகாசம் கோரியதையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்திருந்தனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வருகிற 22-ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது. சிறப்பு அமர்வில் உள்ள வழக்குகளை விசாரிக்க செல்வதால், செந்தில் பாலாஜியின் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்