விபத்துகளை தடுப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.;

Update:2023-04-23 23:02 IST

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியான வெலக்கல்நத்தம் முதல் மாதனூர் வரையில் தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் நடப்பதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி - செட்டியப்பனூர் கூட்டுரோடு, மாராப்பட்டு, கிரிசமுத்திரம், வெலக்கல்நத்தம், மாதனூர் வரையில் சென்று விபத்து நடைபெறும் இடங்களை பார்வையிட்டார்.

மேலும் விபத்துக்கான காரணங்களை கண்டறிவது குறித்தும், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, அம்பலூர், ஆம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது போலீசார் அந்தந்த பகுதிகளில் விபத்துகளை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு வேலிகள் அமைப்பது குறித்தும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்