அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் வெள்ளை விநாயகர் கோவிலில் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு திருமுறை விண்ணப்பமும், தொடர்ந்து சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. இரவு சுவாமிமலை லலிதா வெங்கடேசனின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இறை பணி குழுவினர் செய்திருந்தனர்.