வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வால்பாறை வயிறு வலியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-06-10 21:42 IST

வால்பாறை, 

வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் கீழ்பிரிவு பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக் (வயது 22). தொழிலாளி. இவர் கோவையில் பல்வேறு இடங்களில் பணிகளை செய்து வந்தார். இதற்கிடையே வயிறு வலி காரணமாக முகமது சாதிக் கடந்த சில மாதங்களாக எஸ்டேட் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்தநிலையில் மீண்டும் வயிறு வலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த முகமது சாதிக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சேக்கல்முடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்