சிறுநீரக கல் நோயால் அவதி:17 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-06-14 18:45 GMT

சிறுவன் தற்கொலை

ஓசூர் தேவீரப்பள்ளி அண்ணா நகரை சேர்ந்தவர் கமலேஷ்ஷா. இவருடைய மகன் கிஷன்குமார் (வயது 17). சிறுநீரக கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் சிறுநீரக கல்லை ஆபரேஷன் மூலமாக அகற்றினார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கில் முதியவர் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளியில், ஒரு மரத்தில் 65 வயது முதியவர் பிணம் தூக்குப்போட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில் வடிவு மகராஜகடை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்