சோழவந்தான்,
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தை சேர்ந்த பஞ்சாட்சரன் மகன் பவித்ரன்(வயது 26). இவர் கூலித்தொழில் செய்து வந்தார். மேலும் ஜல்லிக்கட்டு வீரர் ஆவார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று தனது தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காடுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.