ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள தொட்ட திம்மனஅள்ளியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகள் சரண்யா (வயது 18). இந்த நிலையில் சரண்யா திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா இறந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.