காவேரிப்பட்டணம்:
பாரூர் அருகே உள்ள அரசம்பட்டி பக்கமுள்ளது பூசாரி கொட்டாய். இந்த ஊரை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 23). வெல்டிங் கடை ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய பெற்றோருடன் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இந்த தற்கொலை குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.