காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

டேனிஷ்பேட்டை அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-16 19:38 GMT

ஓமலூர்

ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை ராஜமன்னார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). இவர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுடெல்லியை சேர்ந்த சுதா என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு சுதர்சன் (13), தியா (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சுதர்சன் மற்றும் தியா ஆகிய 2 பேரும், புதுடெல்லியில் உள்ள சுதாவின் பெற்றோருடன் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகநாதன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய மனைவி மற்றும் பெற்றோர் லோகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நேற்று தீவட்டிப்பட்டி போலீசில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்