மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
வாழப்பாடி அருகே மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வாழப்பாடி
வாழப்பாடி அருகே திருமனூர் ஆதிதிராவிடர் தெரு பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 32), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் முனியப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது தாயார் வீட்டுக்கு சரண்யா சென்று விட்டார்.
இதையடுத்து மனமுடைந்த முனியப்பன், விஷ விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.