இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Update: 2023-03-13 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள பெல்லட்டியை சேர்ந்தவர் கணேசா. இவருடைய மனைவி சம்பங்கியம்மா (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த சம்பங்கியம்மா கடந்த 5-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பங்கியம்மா இறந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்