காரைக்குடி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). இவர் காரைக்குடி அருகே மானகிரி பகுதியில் உள்ள ஐஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அரியக்குடியிலிருந்து குடிகாத்தான்பட்டி செல்லும் வழியில் உள்ள பாலம் அருகே தனது மொபைட்டினை நிறுத்திவிட்டு திடீரென பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.