தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம்,
மடப்புரத்தில் உள்ள கீழக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைபாலன் (வயது 24). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகாததால் மனவேதனை அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இவரது சகோதரர் தயாளன் பூவந்தி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.