கள்ளக்காதலியுடன் தகராறு; அசாம் வாலிபர் தற்கொலை

சூளகிரி அருகே கள்ளக்காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அசாம் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-05 18:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகே கள்ளக்காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அசாம் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளத்தொடர்பு

அசாம் மாநிலம் கரீம்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய்தாஸ் (வயது 30). இவர் சூளகிரி அருகே மருதாண்டப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும். சுஷ்மிதா தாஸ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பிஜய்தாசுக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முன்னி என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இவர்கள் 2 பேரும் மருதாண்டப்பள்ளி பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

சம்பவத்தன்று பிஜய்தாசுக்கும், கள்ளக்காதலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிஜய்தாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்