தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள கொளகத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 53). இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே கிருஷ்ணன் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இதனிடையே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தனது மகன்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் புலம்பியுள்ளார். இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகன்கள் சரியாக கவனிக்காத விரக்தியில் கிருஷ்ணன், பெட்டிக்கடை அருகே தூக்குப்போட்டு கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.