கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை
கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை சாலையில் கல்குறிச்சி ெரயில்வே கேட்டிற்கு அருகே ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவ்வழியாக வந்து கொண்டிருந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மானாமதுரை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த சிறுமி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.