கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் அருகே திருமணமான ஒரே ஆண்டில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-11-03 18:45 GMT

கல்லூரி மாணவி தற்கொலை

நாமக்கல் அருகே உள்ள அப்பிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் காவ்யா (வயது 20). இவருக்கும், பொம்மிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபிநாத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தாலும் காவ்யா தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பிநாயக்கன்பாளையத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்த காவ்யா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இது குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட காவ்யாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காவ்யா அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டது தெரியவந்து உள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா? என்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரே ஆண்டில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்