சாப்ட்வேர் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

பாலக்கோடு அருகே சாப்ட்வேர் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-28 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே சாப்ட்வேர் என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அருள் மொழிவர்மா. இவரது மகன் திருமூர்த்தி (வயது 26). இவர் பி.டெக் முடித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாதவர். திருமண வயதில் ஒரு அக்காள் மற்றும் தங்கை உள்ளனர்.

கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்காக திருமூர்த்தி பெங்களூருவில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் மணியகாரன் கொட்டாய் மலைக்கு அவர் சென்றார். அங்கிருந்து தனது அக்காளுக்கு செல்போனில் இருந்து வாட்ச்ஆப் மூலம் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மெசேஜ் செய்துள்ளார்.

தீக்குளித்து தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் மணியகாரன் கொட்டாய் மலைக்கு சென்றனர். அதற்குள் திருமூர்த்தி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கருகிய அவரது உடலை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று என்ஜினீயரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககாக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். என்ஜினீயர் காதல் விவகாரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்