பிளஸ்-2 மாணவர் திடீர் தற்கொலை
காரைக்குடி அருகே பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதம் சிக்கியது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து அவர் எழுதிய கடிதம் சிக்கியது.
பிளஸ்-2 மாணவர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை மேலரத வீதியை சேர்ந்தவர் சுடர்ராஜ். இவர் அப்பகுதியில் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது 2-வது மகன் செல்வகுமார் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
செல்வகுமார் கடந்த சில நாட்களாக, தன்னால் சரியாக படிக்க முடியவில்லை என்றும், சரியான பாடப்பிரிவை தேர்வு செய்யாததே இதற்கு காரணம் எனக்கூறி மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சாக்கோட்டை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் மாணவர் செல்வகுமார் எழுதியதாக கடிதம் ஒன்ைற கைப்பற்றினர். அதில் அவர், `தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.