மாணவர் விடுதி சமையலர் தற்கொலை
மாணவர் விடுதி சமையலர் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மணலூர் ஒத்தவீடு சர்வே சிட்டி நகரில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 53) என்பவர் சமையலராக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.