பெண் தற்கொலை

திருவாடானை அருகே பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-08 18:02 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா, எம்.வி. பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமாகாளி (வயது 42). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலா (40). இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தொண்டி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த தொண்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தொண்டி போலீசில் வீரமாகாளி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கலாவிற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்