நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பூபதி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்றும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த பூபதி கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற மங்களபுரம் போலீசார் பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.