மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). விவசாயி. இவர் குடும்ப தகராறு காரணமாக நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணி இறந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.