பாப்பிரெட்டிபட்டி:
பொம்மிடியில் வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வடமாநிலத்தவர்கள்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ராம். இவருக்கு முகேஷ்ராம் (வயது 32) என்ற மகனும், மம்தா தேவி (25), குமாரி (20) என்ற 2 மகள்களும் இருந்தனர். இந்த நிலையில் முகேஷ் ராம் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் கூலித்தொழிலாளியாக சேர்ந்தார். இவருடன் தங்கை குமாரி தங்கி கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையே அதே மில்லில் வேலை செய்யும் பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவரை குமாரி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் முகேஷ் ராம், குமாரி ஆகியோர் வேலைக்கு சென்றனர். ஆனால் மில்லில் குமாரி இல்லாததால் மேற்பார்வையாளர் இதனை முகேஷ்குமாரிடம் கூறினார்.
தற்கொலை
இதையடுத்து முகேஷ்ராம் மில்லில் தாங்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது குமாரி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை மீட்டு உடனடியாக பொ.மல்லாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனியார் மில் வாகனத்தில் கொண்டு சென்றனர்.
அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொம்மிடி போலீசில் முகேஷ் ராம் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து குமாரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.