சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-06 01:00 IST

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த இறையூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சமூக சமத்துவ படை தொழிலாளர்கள் சங்க செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. பொது செயலாளர் அழகேசன், நிர்வாகி அருள்முருகன், பணியாளர்கள் சங்கம் செயலாளர் கலைவாணன், சி.ஐ.டி.யூ. பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய சங்க பிரதிநிதிகள் ராஜேந்திரன், ஸ்டாலின், தொளார் கல்யாணசுந்தரம், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் இறந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், தொழிலாளர்களின் முழு சம்பள தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு வரையிலான வைப்பு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்