ஜல்லிக்கட்டு போட்டியில் திடீர் பதற்றம்.. வாடிவாசல் முன் போராட்டம் - புதுக்கோட்டையில் பரபரப்பு
போட்டி தொடங்குவதற்கு முன்பு கோவில் காளைகளை அவிழ்த்துவிடும்போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற நார்த்தாமலை முத்துமாலை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு கோவில் காளைகளை அவிழ்த்து விடும் நிகழ்வின் சத்தியமங்களும் ஊரை சேர்ந்தவர்களுக்கும், நார்த்தாமலை ஊரை சேர்ந்தவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டியானது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நார்த்தாமலை வாடிவாசல் முன்பு சத்தியமங்கலம் ஊராஇ சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து வருகின்றனர்.